ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்யும் யாரிடம் சொல்லியும் கேட்காத நபர். வேறு வழி இல்லை. கணவனை இரண்டு பிள்ளைகளை கொண்டு கொலை செய்து விட்டு இறந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலமுருகன்
47 வயதான இவருக்கு போதுமணி என்ற மனைவி மற்றும் சூர்யா, சுகன் என்ற இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் உள்ள நிலையில் மகள் திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார் .
மூத்த மகன் சூர்யா தனது குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

இளைய மகன் சுகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் பாலமுருகன் மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவி மற்றும் மகனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவிலும் மது குடித்து விட்டு வந்து வழக்கம் போல மனைவி மற்றும் மகன் சூர்யாவிடமும் வெளியூரில் இருந்து வந்திருந்த மகன் சுகனிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து கயிற்றால் பாலமுருகனின் கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டனர். வெளியில் யாருக்காவது தெரிந்தால் போலீஸிடம் மாட்டி விடுவார்கள் என்று பயந்து, தூக்கு மாட்டி பாலமுருகன் இறந்து விட்டதாக நாடகம் ஆடினர்.
உறவினர்களிடமும் இதையே சொல்லி சமாளித்தனர்.இதையடுத்து சித்தார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சந்தேகம் அடைந்து பாலமுருகனின் சாவில் மர்மம் இருப்பதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரையும் அழைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அந்த விசாரணையில் மூவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்து வந்தனர் அதன் பின்னர் ஒரு கட்டத்தில் உண்மையை ஒத்துக் கொண்டு தந்தையை மனைவி மற்றும் இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்து நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தலைவரை குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடி போதையில் நாளுக்கு நாள் அவரின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் கொலை செய்யும் அளவிற்கு துணிந்துள்ளனர் குடும்பத்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.