திருப்பூரில் இந்துக்களின் இடுகாட்டில் கிறிஸ்துவ மதத்தினரின் உடல் புதைக்கப்பட்டதாக பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்திற்கு வந்தனர்.

திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான இடுகாடு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான இந்துக்கள் முறைப்படி உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.ரவியின் உடல் இந்த சுடுகாட்டில் செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் சிலுவை ஒன்று சாத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பிஜேபியினர் ஆத்திரமடைந்தனர். இந்துக்களுக்கு சொந்தமான இடுகாட்டில் கிறிஸ்துவ உடல் புதைக்கப்பட்டதாகவும்,இந்துகளை அவமதிக்கும் விதமாக கிருத்துவ மத அடையாளம் பொருத்தப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஜகவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது ரவி பூர்விமாக இந்து குடும்பத்தில் இருந்தவர் என்பதும் சமீபத்தில் ரவி மட்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும் ரவியின் தாயார் செல்லாண்டியம்மன் துறை அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தான் ரவி இறந்தால் அதே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என ஏற்கனவே தெரிவித்திருந்ததன் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பாஜகவினர் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ரவியின் குடும்பத்தினர் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்து முறைப்படி ரவியின் உடலை அடக்கம் செய்து கொள்வதாக கூறி இந்து முறைப்படி சடங்குகளை செய்து சிலுவையை அகற்றினார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்துக்களுக்கு உரிய இடுகாட்டில் தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் , இனி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தொடர் கண்காணிப்பில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்து இடுகாட்டின் முன்பாக முழக்கங்கள் முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருத்துவ மதத்திற்கு மதம் மாறியவரின் உடலை இந்துக்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் அடக்கம் செய்ததுமட்டுமல்லாமல் கிருத்துவர்களின் அடையாளமான சிலைவையை பொருத்தி விட்டு சென்றது பாஜக வினரிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்காது என வருவாய்த்துறையினரும் உறுதியளித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.