- பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர். அனைவரின் ஒத்துழைப்போடு
அனைத்து நிலையிலும் தஞ்சை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்வேன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கோவி. செழியன் இன்று மாலை முதல் முறையாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கடை க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அணாணாதுரை, அசோக்குமார், தஞ்சை மேயர் சண்.இராமநாதன்,துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, உள்ளிட்டவர்கள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செயாதியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக நீதி ஆட்சி நடத்துகிற தமிழக முதலமைச்சர் உயர் கல்வித் துறைக்கு பட்டியல் இனத்தைச் சார்ந்த எளியவன் ஓலை குடிசையில் பிறந்த ஏழைத்தொண்டனை இன்றைக்கு நியமித்திருப்பது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்று நோக்குகிறது. வார்த்தையில் சொல்லுவது வேறு, செயலில் செய்வது வேறு, என்ற நிலையை மாற்றி, என்ன நினைத்தாரோ அதை வார்த்தைகளில் சொன்னார். வார்த்தைகள் என்ன சொன்னாரோா அதை சட்டத்தின் மூலம் செய்து காட்ட முடியும் என்பதை ஒரு பட்டியல் இனத்தவரை இன்றைக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக அமைத்திருக்கிறார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/tamil-nadu-chief-minister-fulfilled-the-long-standing-demand-of-the-disabled-they-celebrated-by-giving-sweets/
இந்த நிலையில் நமது மாவட்டத்தினுடைய வளர்ச்சி தமிழகத்தில் இருக்கிற மாவட்டங்களில் முதன்மை வாய்ந்ததாக இருக்கும். நமது மாவட்டத்தினுடைய முழு வளர்ச்சிக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஒத்துழைப்போடு அவருடைய கருத்துக்களை ஏற்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் உடைய ஒத்துழைப்போடு எல்லா நிலையிலும் தஞ்சை மாவட்டத்தை முதன்மை வாய்ந்த மாவட்டமாக முன்னேற்ற பாதை எடுத்துச் செல்வதற்கு இந்த எளியவன் என்றென்றும் துணை நிற்பேன். முதல்வரின் அனைத்து திட்டங்களும் தஞ்சை மாவட்டத்தின் முதலில் வந்தது என்ற புதிய அத்தியாயத்தை தொடங்குவது தான் என்னுடைய தலையாய பணியாக இருக்கும் என்றார்.
பேட்டி.. கோவி.செழியன்
உயர் கல்வித்துறை அமைச்சர்.
Leave a Reply
You must be logged in to post a comment.