திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- இடித்தாக்கி பெண் ஒருவர் பலி

1 Min Read
உயிரிழந்த மல்லிகா

தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

மாலை வேளையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து சுமார் இரண்டு மணி நேரம் திண்டுக்கல் நகர்ப்புற பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், சிலப்பாடி, வாணி விலாஸ் மேடு, வெள்ளோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாடிக்கொம்பு, ஆத்தூர், சின்னாளபட்டி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது மற்றும் இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் சாலையில் உள்ள உத்தனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 45 )இவர் கட்டிட சித்தாள் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி அருகே உள்ள PWD காலனி செல்வி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென மழை பெய்தது இதையடுத்து பணியாளர்கள் அனைவரும் கட்டிடத்திற்கு கீழே வந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து மழை லேசாக நின்ற பிறகு கட்டிடத்தில் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பகுதியை மூடி வைப்பதற்காக சென்ற போது இடி தாக்கியதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மல்லிகா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு வந்த இடத்தில் கூலித் தொழிலாளி இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply