பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உரையாற்றினார்.
ஒருகாலத்தில் பெண்கள் மார்பு சீலைக்கு வரி போட்டார்கள்,மேலாடை செலுத்தக்கூடாது என்றார்கள்,எனவே இந்த மதம் வேண்டாம் என்று நாங்கள் மதம் மாறினோம்.எச்.ராஜா யார் ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டுச்சாம்.இந்த தேசத்திற்கும் பாஜாவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது,ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றச்சொல்லுகிறீர்கள் ஏற்றினால் என்ன தருவீர்கள் நாங்கள் ஜிஎஸ்டி யை ஏற்றுவோம் என்கிறீர்கள் என்று பேசினார்.
இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாகவும் இரண்டு பிரிவுகளின்(153(A)(I)(a), 505(ii)) கீழ் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.