ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.பி.பி.ஜி சங்கர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார்.மேலும் இவர் பாஜகவில் எஸ்.சி,எஸ் டி,பிரிவின் மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை நசரத்பேட்டையில் வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர்.இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. பின்னர் காரில் இருந்து வெளியேறிய பி.பி.ஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார்.அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர்.

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் இது போன்று அடுத்தடுத்த சம்பவங்கள் நடப்பதை தவிற்க்க காவல் துறை விரைந்து செயல்படவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேவையான முயற்சிகளில் போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.