வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோற்றிருப்பார் – ராகுல் காந்தி..!

2 Min Read

வாரணாசி தொகுதியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மோடி 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார்.

பிரியங்கா காந்தி

குடியரசுத்தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், ஜூன் 9 ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இருப்பினும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதிலும் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முதல் இரண்டு சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் தான் முன்னிலையில் இருந்தார்.

மோடி

இதானல் மோடி தோற்றுவிடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் மோடி முன்னிலை வகித்து வெற்றி பெற்றார். இருப்பினும் கடந்த 2 தேர்தல்களில் மோடி பெற்ற வாக்குகளை விட இந்த முறை கிடைத்த வாக்குகள் குறைவு தான்.

இந்த முறை 6,12,970 வாக்குகள் பெற்று 1,52,513 வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை தோற்கடித்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி,

பாஜக

வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் 2.3 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி தோற்றிருப்பார் என்று கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நடபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது;-

“அயோத்தியில் பாஜக தோற்றிருக்கிறது. அயோத்தியில் மட்டுமல்லா வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி 2.3 லட்சம் வாக்குக்ள வித்தியாசத்தில் தோற்றிருப்பாார். இதை நான் ஆணவத்துடன் கூறவில்லை.

காங்கிரஸ்

நாட்டு மக்கள் மோடியின் அரசியலுக்கு தாங்கள் எதிரானவர்கள் என்கிற செய்தியை அவருக்கு கொடுத்திருக்கின்றனர். அமேதி, ரேபரேலி உட்பட உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தொகுதி மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நரேந்திர மோடியும், அமித்ஷாவும் நாட்டின் அரசியல் சாசனத்துடன் விளையாட முயன்றார்கள். எனவே தான் மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் நாங்கள் இணைந்து போட்டியிட்டோம்” என்று கூறியுள்ளார்.

வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோற்றிருப்பார் – ராகுல் காந்தி

தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்த திமுக தலைமையிலான கூட்டணி 39 +1 தொகுதிகளை வென்றது. அதேபோல, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் 20-ல் 19 தொகுதிகளை கைப்பற்றினர்.

முதல் முறையாக பாஜக சார்பில் ஒரு எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக ஆளும் உ.பியில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply