- ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய
எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற எதிர் கட்சித்தலைவருமாகிய ராகுல்காந்தி குறித்து தரக்குறைவாக பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜாவை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2003 ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.-
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு சனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். “தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்றும் பதிலளித்தார்.
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச்சு 2004ல் அறிவித்தார். இந்தியாவின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச்சு 2004ல் அறிவித்தார்.இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி எண்பது தொகுதி கொண்ட உத்திரப் பிரதேசத்தில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளைய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், சாதி மற்றும் மதப்பிரிவினைகளால் ஏற்படும் பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதைக் கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.