Gudiyatham : டாடா சுமோவில் ஆடுகள் திருட்டு – பொதுமக்கள் பிடித்து தர்ம அடி..!

1 Min Read

குடியாத்தம் பகுதியில் டாடா சுமோவில் ஆடு திருடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதி பிறகு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image
பொதுமக்கள் தர்ம அடி

வேலூர் மாவட்டம், அடுத்த குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் சுல்தான் என்பவர் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை டாட்டா சுமோவில் கடத்திச் செல்லும் போது பொதுமக்கள் பார்த்து விரட்டிப் பிடித்தனர்.

ஆடு திருடிய நபர்

பின்னர் சுல்தான் என்பவரை பொதுமக்கள் அடித்ததில் மயங்கி விழுந்தார். அப்போது காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை

முதற்கட்ட விசாரணையில் சுல்தான் என்பவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், இந்த பகுதியில் ரஷிமா அத்தாவுல்லா குத்தூஸ் ஆகியவர்களின் ஆடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

குடியாத்தம் அரசு மருத்துவமனை

இந்த பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக குடியாத்தம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இன்று டாட்டா சுமாவில் ஆடுகளைத் திருடி பிடிபட்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply