Gudalur : வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு..!

1 Min Read

கூடலூர் அருகே வாழை தோட்டத்தில் நுழைந்த ஆண் காட்டு யானை வயல் பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தது. கூடலூரை அடுத்துள்ள தேன்வயல் கிராமத்தில் வாழை தோட்டத்தில் சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

- Advertisement -
Ad imageAd image
வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குளும் காட்டு யானை உலா வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு

இந்த நிலையில் இன்று காலை கூடலூர் அடுத்த தேன் வயல் பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை வயல் பகுதியில் உள்ள சேற்றில் சிக்கியுள்ளது. பின்னர் நீண்ட நேரம் சேற்றிலிருந்து எழ போராடி முயற்சித்தும் வெளியேற முடியாமல் காட்டு யானை துடிதுடித்து உயிரிழந்தது.

வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு

இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலை நிலத்தில் உயிரிழந்தது ஆண் காட்டு யானை என்பதும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனத்துறை

கூடலூர் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொடர்ந்து ஊருக்குள்ளும், விளைநிலங்களுக்கும் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Share This Article

Leave a Reply