கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை….

1 Min Read
ஜி - ஸ்கொயர் நிறுவனம் கோவை

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூர், மைசூர் மற்றும் பெல்லாரியிலும் மற்றும் தெலுங்கானாவிலும்  ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சேலம் – கொச்சின் புறவழிச்சாலையில் பட்டணம் பகுதியில் அந்நிறுவனம் வீட்டு மனைகள் விற்பனை செய்து வருகிறது. இதேபோல சிங்காநல்லூர், கண்ணம்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்பரேட் அலுவலகம் கோவை – அவிநாசி சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 3 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தொழிலதிபர் மகேந்திர ராமதாஸ் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் நடைபெறுகிறது. மேலும் வருமான வரித்துறையினர் சோதனை அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீடுகள், ஜி ஸ்கொயர் நிர்வாகி பாலாவின் ஈசிஆர் வீடு, முதலமைச்சர் மருமகன் சபரீசனின் உறவினர் பிரவீன் வீடு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article

Leave a Reply