சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி அமைச்சரின் உதவியாளர் ஒரு லட்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோ.
விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவராஜ் பைரோடெக் நிறுவனத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் சட்டவிரோதமாக தகர செட் அமைக்கப்பட்டு பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது .
இதன் காரணமாக ஸ்ரீ சிவராஜ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜமாணிக்கம் போர்மேன் உட்பட ஆறு பேர் மீது சூளக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம் தன் மீது இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சரின் உதவியாளரிடம் ஒரு லட்சம் கொடுத்ததாகவும் ஒரு லட்சம் பெற்றுக் கொண்டும் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தன்னை சிறையில் அடைக்க இருப்பதாக கூறி ஒருவர் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் , சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் நபர்களிடமிருந்து அமைச்சர் உதவியாளர் மூலம் பணம் பெற்றாரா அல்லது அவர் பெயரைச் சொல்லி பணம் பெற்ற மோசடி நபர்கள் யார் பட்டாசு ஆலை விதி மீரல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.