விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்ய பெண் கேட்டு தர மறுத்த ஆத்திரத்தில் பெண்ணின் தந்தை கோவிந்தன் (40) தாய் கலையம்மா (35) ஆகிய இருவரையும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் பாரதி (23) காப்பு காட்டில் உள்ள விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் தலை மற்றும் கை கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த கோவிந்தன் (40) மற்றும் கலையம்மா (35) ஆகிய இருவரும் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த பாரதியை ஆய்வாளர் சித்ரா மற்றும் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் காட்டுப்பகுதியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பாரதியை அதிரடியாக கைது செய்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரையும் நாட்டுத் துப்பாக்கியால் தான் சுட்டதாகவும் அவர்கள் வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்ததாகவும் எனக்கு கோவிந்தன் மற்றும் கலையம்மா மூத்த மகளை திருமணம் செய்து தருவதாக ஏமாற்றிய நிலையில் சுட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பாரதி என்பவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,
பாரதியிடம் இருந்து அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுப்புற செய்தனர் கண்டாச்சிபுரம் போலீசார்.
Leave a Reply
You must be logged in to post a comment.