அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

2 Min Read
ஆளுநர்

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்டியிருந்த வழக்கில் திடீர் திருப்பம். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சட்ட விரோதமான பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதி மறுத்த ஆளுநர், அந்த உத்தரவை சில மணி நேரத்துக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த மாதம் ஜூன் 16 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அதேபோல், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஜூன் 29 ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்தார் ஆளுநர். அவர் அடுத்த சில மணி நேரங்கள் அந்த உத்தரவை நிறுத்தி வைக்க முடிவெடுத்தார். அது போன்று செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்பதால் அதனையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு. இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அமைச்சர் ஒருவரை நீக்க வேண்டும் என முதல்வர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியும். முதல்வர் பரிந்துரைக்காமல் அமைச்சரை தன்னிச்சையாக நீக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதேபோன்று ஆளுநர் விவகாரத்திலோ அல்லது அமைச்சராக நீடிக்க பிறப்பித்த அரசாணையையோ ரத்து செய்யவும் முடியாது.

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குறிப்பாக சட்டப்பிரிவு 136-ன் படி ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அதனை அடிப்படையாக கொண்டு தான் பிறப்பித்த உத்தரவை உடனடியாக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானது என தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். எனவே, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எந்தவித தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Share This Article

Leave a Reply