தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வாகனங்களை சட்டசபையில் ஒப்படைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் சனிக்கிழமை மதியத்திலிருந்து அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்து செல்லலாம். ஒருவேளை அதிக பணத்தை எடுத்து சென்று பறக்கும்படையிடம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த 2019-ல் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. தமிழகத்தில் பறக்கும் படையின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் அதேபோல் தான் வரும் லோக்சபா தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவத்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அரசுத்துறைகள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிகளை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரியத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட கார்களை ஒப்படைக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட வாகனத்தை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றனர். மேலும் அரசுத்துறைகளில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் பெரும்பாலும் தேர்தல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து அரசு வாகனங்களும் போக்குவரத்து துறை ஆணையரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும் ஆட்சியாளர்கள் யாரும் தேர்தல் பணிக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதை கண்காணிக்க தேர்தல் துறை தனிப்படை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.