கோவையில் அரசு பள்ளி தலைமையாசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளை. போலிசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (வயது 70). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் (திருமணமாகாதவர்).

அப்போது நேற்று இரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க வழியாக நுழைந்து கத்தியை காட்டி விஜயலட்சுமியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின், 4 பவுன் வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
மேலும் நாற்காலியில் கட்டி போட்டு விட்டு பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்று உள்ளனர்.

அப்போது விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்று உள்ளனர். பின்னர் விஜயலட்சுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதும் அவரை அப்பகுதி மக்கள் பிடிக்க முயல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.

மேலும் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இரண்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் உள்ள ஸ்டிக்கர்களை கொண்டு அந்த மதுபானங்கள் எந்த மதுபான கடையில் வாங்கப்பட்டது என்றும், போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது மர்ம நபர்கள் இருவரும் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.