விலைவாசி குறித்து பிஜேபி தலைவர்கள் செய்ய வேண்டியது இந்தியாவில் ஆளுகின்ற அரசின் பிரதமர் மோடி அவர்களிடம் பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலைகளை குறைதால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என திருவாரூரில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருவாரூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியான வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.அங்கு கலைஞர் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.தொடர்ந்து அங்கு மரக்கன்று நட்டார்.அப்போது மரக்கன்றுக்கு நீர் ஊற்றும்போது கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, இனமான பேராசிரியர் வாழ்க என்று முழக்கமிட்டபடி அவர் செடிக்கு நீரூற்றினார்.
அதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிரே உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் படகு சவாரி செய்து குளத்தின் நடுவில் உள்ள நாகநாதசுவாமி ஆலயத்திற்கு சென்று விட்டு திரும்பினார்.அதனைத் தொடர்ந்து திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை அவர் பார்வையிட்டார்.
மேலும் கலைஞர் கோட்டத்தில் உள்ள செல்ஃபி முனையத்தில் நாற்காலியில் அமர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் எடுத்துக் கொண்டார்.தொடர்ந்து கலைஞர் அருங்காட்சியகம் சென்று அங்கு கலைஞரின் அரிய புகைப்படங்களை கண்டு மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது….. சுயமரியாதையும் தன்மானத்தையும் தன்னம்பிக்கையும் இளைஞர்களுக்கு ஊட்டுவதாக கலைஞர் கோட்டம் திகழ்வதாக மஸ்தான் தெரிவித்தார் .
பாஜக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து கேட்டபோது அவர் கூறுகையில்.. தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகிறது இதேபோல் உழவர் சந்தைகளிலும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. விலைவாசி குறித்து பிஜேபி தலைவர்கள் செய்ய வேண்டியது இந்தியாவில் ஆளுகின்ற அரசின் பிரதமர் மோடி அவர்களிடம் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் விலைகளை குறைதால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் மேலும் தமிழக அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்தது மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஒன்றரை லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.