நாகர்கோவில் பாரதிபுரத்தில் செண்டர் மீடியினில் அரசு பஸ், லாரி மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து களியக்காவிளைக்கு இரவு 9 மணி அளவில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை குழித்துறை பணிமனையை சேர்ந்த ரசஸ்ராஜ் ஒட்டி வந்தார். அப்போது பஸ்ஸில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது பேருந்து பார்வதிபுரம் மேம்பாலம் அமைந்துள்ள கட்டையன்விளை அருகே வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருக்கும் சென்டர் மீடியனில் பேர்ந்தின் முன் சக்கரம் எதிர்பாராத விதமாக ஏறியது. அதில் பேருந்து முன் பகுதி பலத்த சேதமடைந்து பேருந்து செல்ல முடியாமல் அப்படியே நின்றது.

பின்பு மோதிய வேகத்தில் சென்டர் மீடியன் கல் சிதறி ரோட்டில் விழுந்தது. அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து முந்திரி பருப்பு லோடு ஏற்றி வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது. அதில் லாரி தாறுமாறாக ஓடி சாலையோரமாக நிறுத்திய கார் மீது மோதியது. அதில் கார் பலத்த சேதமடைந்தது.
அப்போது காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கபட்டது. அப்போது விபத்தால் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் தகவலறிந்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகர்கோவில் டெரிட் ஜங்ஷனில் அரசு பஸ் செண்டர் மீடியனில் மோதியது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் வடசேரியில் சென்ட்ரல் மீடியனில் கார் மோதியது.

இந்த நிலையில் இன்று இரவு பார்வதிபுரம் கட்டயன்விளை பகுதியில் சென்டர் மீடியனில் அரசு பஸ்,லாரி மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் 3 பேர் காயமுற்றனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் சாலை இருபுறமும் எந்தவிதமான தெரு விளக்கு வசதியும் இல்லை இதனால் மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையிலும் பொதுமக்கள் டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட் உதவியுடன் வாகனங்களை மீட்டனர்.

அப்போது சென்டர் மீடியம் அமைந்துள்ள பகுதியில் எந்த விளக்குகளும் இல்லாததே தொடர் விபத்துக்கு காரணம் எனவும் உடனடியாக இந்த சென்டர் மீடியம் அணைத்தும் மாற்ற படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.