பிரதமர் நரேந்திர மோடியை ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஜூன் 23 அன்று வாஷிங்டன் டிசி-யில் சந்தித்தார்.
செயற்கை நுண்ணறிவு, நிதிநுட்பம், இணையவெளி பாதுகாப்பு உற்பத்தி மற்றும் சேவைகள், இந்தியாவில் மொபைல் சாதன உற்பத்தி ஆகிய தளங்களில் ஒத்துழைப்பதற்கான கூடுதல் வழிகளை ஆராய சுந்தர் பிச்சையை அழைத்திருந்தார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் கூகுள் மற்றும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு பற்றியும் பிரதமரும், சுந்தர் பிச்சையும் விவாதித்தனர்.
சுந்தர் பிச்சை கூறியதாவது,”வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தில் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.