சாய்பாபா பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை டூ சீரடிக்கு இனி பறக்கலாம்.. இண்டிகோ கொடுத்த அப்டேட்.

3 Min Read
  • கோவை: சாய்பாபா பக்தர்கள் சீரடிக்கு எளிதில் சென்று வரும் வகையில், கோவையில் முதல்முறையாக கோவை – சீரடிக்கு நேரடி விமான சேவை இண்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரடி சாய் பாபாவை மதங்கள் கடந்து பலதரப்பட்ட மக்களும் வணங்கி வருகின்றனர். சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒருமுறையாவது சீரடிக்குச் சென்று சாய்பாபாவை வணங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சாய்பாபா பக்தர்களின் ஆசையாகவும் இருக்கும். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது சீரடி கோயில்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பிறகு சீரடிக்குத்தான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீரடி என்ற இடம் சாய்பாபாவின் வீடு என்று கருதப்படுகிறது. இங்கு வந்து ஒருமுறை பாபாவை தரிசனம் செய்தாலே அனைத்துப் பாவங்களும் தொலைந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மதம், மொழி, இனம் போன்ற பாகுபாடுகளைக் கடந்து ஏழை மக்களுக்கு அற்புதங்கள் பல செய்யும் உன்னத தெய்வமாக சீரடி சாய்பாபா போற்றப்படுகிறார். சாய் பாபாவை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சீரடி சென்று வருகின்றனர். இதனால், பக்தர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் பல்வேறு நகரங்களில் இருந்து சீரடிக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

சைனகர் சீரடி ரயில் நிலையத்தை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எளிதில் சென்றடையலாம். இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து முதல்முறையாக சீரடிக்கு நேரடி விமான சேவை அக்டோபர் 27 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சாய்பாபா பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சார்ஜா, அபுதாபி, சிங் கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட விமானங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், சீரடிக்கு விமானம் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து சீரடிக்கு இடையே முதல்முறையாக இண்டிகோ விமானம் சார்பில் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய விமான சேவை வரும் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகல் கூறுகையில், சாய்பாபா பக்தர்களின் வசதிக்காக கோவை – சீரடி இடையே தினசரி விமான சேவை அக்டோபர் 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 6-இ 6797 என்ற எண் கொண்ட இந்த விமானம் இதன்படி கோவை – ஷீரடி கோவை விமான நிலையத் தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை வழியாக மாலை 3.10 மணிக்கு ஷீரடிக்கு சென்றடைகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க :http://thenewscollect.com/tragedy-in-up-fasting-for-the-long-life-of-the-husband-the-wife-put-a-twist-after-finishing/

கோவையில் இருந்து சீரடி செல்ல ரயில் சேவை மட்டுமே இருந்து வந்தது. இதுவரை நேரடி விமான சேவை சீரடிக்கு இயக்கப்படவில்லை. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் சீரடிக்கு விமானம் இயக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். ஆனால், சீரடியில் இருந்து கோவைக்கு நேரடி விமான சேவை இல்லை. சீரடியில் இருந்து சென்னைக்கு விமானம் உள்ளது. சென்னையில் இருந்து விமானம் அல்லது ரயிலில் கோவைக்கு வர வேண்டும் என்று கூறினர்.

 

Share This Article

Leave a Reply