உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி – எதிர் கட்சிகளுக்கு விவாத பொருளாக அமையும் – திமுக முன்னோடிகள்

2 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - முதல்வர் மு க ஸ்டாலின்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்  , தற்போதய அரசியல் சூழ்நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அவசியமற்றது என்று கட்சி முன்னோடிகள் கருத்து .

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஆகஸ்தீசன் தலைமையில் நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

குமாரி மாவட்ட திமுக அலுவலகம்

இக்கூட்டத்தின் போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு அரும்பாடுபட்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்க இல்லம் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறப்பு முகாம்களை நடத்திய நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

மேயர் மகேஷுக்கு உறுதுணையாக இருந்த இளைஞர் அணி உறுப்பினர்களை சேர்க்க இருந்து உழைத்த நகர ஒன்றிய மாநகரச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

இந்த தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது , ” தற்போதைய சூழ்நிலையில் , தம்பி உதயநிதிக்கு துணை துணை முதலமைச்சர் பதவி வழங்கும் திட்டம் , தலைவருக்கு (ஸ்டாலின்) இல்லை .

வரும்  2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெரும் என்ற அபார நம்பிக்கையை வைத்துள்ளார் எங்களது தலைவர் (திமுக தலைவர் மு க ஸ்டாலின்) .

முதலமைச்சர் மு க ஸ்டாலின் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த சூழ்நிலையில் தம்பி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் ,  2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர் கட்சிகளுக்கு அது விவாத பொருளாக அமையும் . அதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் தலைவர் (ஸ்டாலின் ) கவனமாக இருக்கிறார் .

எங்கள் கழகத்தை பொறுத்தவரை தம்பி உதயநிதி என்று அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தாரோ அன்றிலிருந்தே தலைவருக்கு அடுத்த பதவியில் தான் அவரை வைத்து பார்க்கிறோம் . அவருக்கு தனியாக துணை முதலமைச்சர் பதவி என்பது தற்போதய அரசியல் சூழ்நிலையிக்கு பொருத்தம் இல்லாத ஒன்றாகும் !”  என்று தெரிவித்தார் .

Share This Article

Leave a Reply