தமிழக முதலமைச்சரை மெய் சிலிர்க்க வைத்த நெல்லை மாணவி வெள்ள நிவாரண நிதியாக தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வழங்கினார்.இந்த மாணவியின் செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.இது போன்ற செயல்பாட்டில் அனைவரும் ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பு.

தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு கடந்த 17,18 தேதிகளில் கடுமையான கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது,அதைவிட மழையின் அளவு, பலமடங்கு மழைப்பொழிவு இருந்தது. இதனால் வரலாற்றில் இந்த மாவட்டத்தில் பதியப்படாத மழையின் அளவாக பதிவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக காயல்பட்டினத்தில் 94 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.இந்த பகுதி வெள்ளக்காடாக மாறியது. ஓராண்டில் பொழிய வேண்டிய மழை, ஒருநாளில் கொட்டி தீர்த்ததை மக்கள் ஆண்டாக அறிவார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆறு மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம்,ஏரல்,தூத்துக்குடி நகரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாடு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.மழைப்பொழிவு கடுமையான பிறகு 10 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தங்கள் உடமைகளையும் பொருட்களும் இழந்த பொதுமக்கள் பல்வேறு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட 2,700 மதிப்புள்ள மொத்தம் 17 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்ட ஆட்சிய கார்த்திகேயன் அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் கே என் நேரு உடன் இருந்தனர் மேலும் நெல்லை டவுண் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலசுப்ரமணியன் அவரின் மகள் சேவிதா பகவதி இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தான் புதிய ஆடை வாங்குவதற்காக வைத்திருந்த சேமிப்பு பணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தார் அதை வாங்கிய தமிழக முதல்வர் மாணவியை பாராட்டியதோடு நிதியை பெற்றுக் கொண்டார்.
இப்படி நிதி உதவி வழங்குவது பேரிடர் காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என முதல்வர் வேண்டிக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.