நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் மறு ரிலீஸ் ஆக பாபநாசம் சக்தி சினிமாஸ் தியேட்டரில் வெளியாகி ஓடியது. நேற்று நிறைவு நாள் காட்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவரும், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளருமான இரா. விஜய் சரவணன் வருகை புரிந்தார்.

அப்போது இந்த படத்தினை வெளியீடு செய்த பாபநாசம் சக்தி சினிமாஸ் தியேட்டர் மற்றும் சக்தி ஃபிலிம் பேக்டரி உரிமையாளருமான பி. சக்திவேலனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். விஜய் சரவணனுக்கு திரையரங்க மேனேஜர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் மேலாளருக்கு விஜய் சரவணன் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். கில்லி திரைப்படத்தினை மாவட்ட நிர்வாகிகளும், ஒன்றிய நிர்வாகிகளும் ரசிகருடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், தஞ்சை நகர தலைவர் பாரி, தஞ்சை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,

பாபநாசம் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜா, பாபநாசம் நகர தலைவர் சூர்யா மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி சோழக்கதிர் வழங்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.