பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. எனவே, நாம் அனைவரும் இந்த சரித்திர வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், இன்றைய தினம்,பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடைபெற்றது.

ஜூன் 4 அன்று வெளியாகவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், பாஜக இம்முறை தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கும். முன்பை விட மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, இன்னும் வலிமையாக, பாரதப் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. எனவே, நாம் அனைவரும் இந்த சரித்திர வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும்.
கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் அண்ணன் எல்.முருகன், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக இணை பொறுப்பாளர் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.