ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்தல் மூன்று பேர் கைது.

2 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது 5 கிலோ கஞ்சா பறிமுதல்-திருவண்ணாமலை நகரப் பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் திணறி வரும் காவல்துறையினர்.

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலையில் ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தொடர்ந்து விற்பனையில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள வ.உ.சி நகர், பழைய அரசு மருத்துவமனை பகுதிகள், மற்றும் சமுத்திரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் பலர் ஈடுபட்டு வருவது சர்வ சாதாரணமான ஒன்றாக திருவண்ணாமலை யில் இருந்து வருகிறது.

பிரவீன் குமார், விக்னேஷ் மற்றும் சந்துரு

இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சில நபர்களை காவல்துறையினர் அவ்வப்போது கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா பிடிப்பது என செய்திகளை அளித்து வருவதும், மீண்டும் அடுத்த நாளே திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்து திருவண்ணாமலை நகர பகுதிகளில் விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக திருவண்ணாமலை நகர காவல் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியில் பிரவீன் குமார், விக்னேஷ் மற்றும் காட்டு மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு ஆகிய மூவர் கஞ்சா விற்பனையின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமிருந்து சுமார் ஐந்து கிலோ கஞ்சாவினை காவல் துறையினர் கைப்பற்றினார். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீன் குமார், விக்னேஷ் மற்றும் சந்துரு ஆகியோரை திருவண்ணாமலை நகர காவல் துறை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை நகரப் பகுதியில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் எவ்வளவு அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா விற்பனையை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.இளைஞர்களின் எதிர்காலம் இது போன்ற செயல்களால் கேல்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்று ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.தமிழக போலீசார் சிறப்பு படை அமைத்து இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Share This Article

Leave a Reply