மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது எருமாப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மாயி.. 55 வயதாகிறது.. இவரது மகள் பவித்ரா. 25 வயதாகிறது. பவித்ராவின் கணவர் பூவேந்தன்.27 வயதாகிறது. உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்தவர் பூவேந்தன்.. இவர்கள் இருவருமே முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.. இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.தற்போது 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், பூவேந்தன்,அடிக்கடி,கஞ்சா புகைப்பதால் கஞ்சா போதைக்கு அடிமையாகியிருக்கிறார்.. அத்துடன் போதையில் வீட்டுக்கு வந்து பவித்ராவிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, தம்பதிக்குள் இது தொடர்பாக அடிக்கடி தகராறு வந்துபோயிருக்கிறது. தகராறு: கடந்த வாரமும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது. மகளின் வாழ்க்கை நாசமாகி கொண்டிருப்பதை பார்த்து மனம் வேதனையுற்ற பவித்ராவின் அப்பா மாயி, 3 நாட்களுக்கு முன்பு வந்து மகளை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் உள்ள முருகன் கோவில் தெருவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டில், 3 நாட்களாக பவித்ராவும், அவரது அப்பாவும் தங்கியிருந்தனர். தன்னைவிட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில், நேற்று மதியம் பழனிச்செட்டிபட்டி வீட்டுக்கு, தன்னுடைய நண்பருடன் பைக்கில் வந்தார் பூவேந்தன்.
அங்கு வந்த அவர் இருவரிடமும் ஆத்திரத்துடன் பேசி இருக்கிறார் இந்த நிலையில் மனைவியுடனும், மாமனாருடனும் தகராறு செய்தார்.ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த பூவேந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பவித்ராவை சரமாரியாக குத்தினார். இதைப்பார்த்து அலறிக்கொண்டே தடுக்க வந்த மாமனார் மாயியையும் கத்தியால் குத்திக்கொன்றார்.பவித்ரா, மாயி இருவருமே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததையடுத்து, பூவேந்தன் அங்கிருந்து பைக்கில் எகிறி தப்பினார்.. ஆனால், பூவேந்தனுடன் வந்த அவரது நண்பர் முருகேசனை அந்த பகுதி மக்களே விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். இப்போது பூவேந்தன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. போலீசார் இன்னமும் தேடி வருகின்றனர். நேற்றைய தினமும் தலைக்கேறிய கஞ்சா போதையுடன்தான் தகராறு செய்திருக்கிறார் பூவேந்தன்.. பவித்ராவும், மாயியும் தங்கியிருந்தது, மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும்.. இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.இப்போது பவித்ரா,பூவேந்தன் குழந்தையின் நிலை என்னவாகும்.கஞ்சா போதை இப்படி குடும்பத்தை சீரழித்து இருப்பது மதுரை பகுதியில் பரபரப்பாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.