உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா : ஆட்டோவில் வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்..!

2 Min Read

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

- Advertisement -
Ad imageAd image

இதில் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கந்தூரி விழாவில் பங்கேற்றனர். நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம்

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது. ஸ்தூபி இசை தாரை தப்பட்டை என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து, கால் மாட்டு வாசலில் சந்தனம் குடங்கள் இறக்கப்பட்டு, நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாகிப் சந்தனம் பூசினார். இந்த நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை செஞ்சி மஸ்தான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கந்தூரி விழாவில் பங்கேற்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்

முன்னதாக வைபவ இடத்திற்கு ஏ.ஆர் ரகுமான் நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் வந்து இறங்கினார். அதனைத் தொடர்ந்து மயக்கு நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலிபா மஸ்தான் சாஹிப் மற்றும் பக்தர்கள் கூட்டத்தில் தூங்கி வரப்பட்ட நிலையில் சுற்றி இருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர். பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நாகூர் கந்தூரி விழா வருகிற 27 ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு நிறைவு பெறும்.

Share This Article

Leave a Reply