தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகர் விஜய் , அரசியல் பொறுத்த வரை ரஜினிக்குக்கு எதிர்மறையாக நிற்பார் என்ற பேச்சு தற்போது தீவிரம் அடைந்துள்ளது .
கடந்த சில வருடங்களாக சினிமாவை தொடர்ந்து தான் அரசியலிலும் களம் காண போகிறேன் என்று கூறி வந்த நடிகர் விஜய் , ரஜினிகாந்த் போல் வெறும் வாய் வார்த்தையில் ஜாலம் காட்டாமல் , தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி , சென்றாண்டு பெப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரோடு அவருக்கான கட்சியை தொடங்கினர் .
‘ஆழம் அறியாமல் காலை விடாதே’ என்ற பழமொழிக்கு ஏற்ப , கட்சி தொடங்கியதும் எனோ தானோ என்று செயல்படாமல் சற்று நிதானமாகவே அணைத்து முடிவுகளும் எடுத்து வந்தார் .

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் , நாம் தமிழர் கட்சி சீமான் முதல் , பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வரை , விஜய் எங்கள் சொத்து என்று சொந்தம் கொண்டாடினார் .
எனினும் எந்த புகழ்ச்சிக்கும் மயங்காமல் தனது கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலை தான் நேரடியாக சந்திக்கும் என்றும் , இடையில் வந்த 2024 மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என எதிலும் தனது கட்சி போட்டியிடாது என்றும் இந்த தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பனையூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply
You must be logged in to post a comment.