உதகையில் தாமதமாக துவங்கியது உறைப்பனி : கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

3 Min Read

ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கி உள்ளது. இதனால் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் வாகனங்களின் மீது வெண் கம்பளம் போர்த்தியது போல பனி உறைந்து காணபட்டது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக படிக்காலம் தாமதமாக சுமார் 50 நாட்களுக்கு பின் இன்று துவங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர் பனிப்பொழிவு காணபட்ட நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரைபந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது.

உறைப்பனி

இதனால் மற்ற காலங்களில் குளு, குளுவென காணப்படும் ஊட்டியில் பனிக்காலத்தின்போது உறைபனி கொட்ட தொடங்கும். ஆனால் இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்தது. இதனால் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்கள் மற்றும் புல்வெளிகளின் மேல் நீர் துளிகள் உறைந்து வெள்ளை நிறத்தில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மற்றும் புல்வெளிகள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காணப்பட்டது.அந்த வரிசையில் இந்தாண்டு பனிக்காலமும் ஊட்டியில் தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது வழக்கத்தை விட சுமார் 50 நாட்களுக்கு பிறகு தாமதமாக நேற்று முதல் ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கியது. இதன்மூலம் ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கி உள்ளது.

உதகையில் தாமதமாக துவங்கியது உறைப்பனி

இதன் காரணமாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து உறைந்து காணப்பட்டது. மரம், செடி, கொடி மற்றும் புற்கள் பச்சை நிறத்தில் பசுமையாக தெரிந்து வந்த நிலையில் தற்போது உறைபனி கொட்டி வெண்மையாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையிலும், அதன் ஓரமும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடக்கிறது. இந்த உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. தோட்டம் உள்ளிட்ட வேலைகளுக்கு தொழிலாளர்கள் சென்று வேலை செய்யவும் கடும் அவதியடைந்தனர். அதேநேரத்தில் கடும் குளிர், பனியை சமாளிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிகின்றனர். மேலும் சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்றனர்.

கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இன்று அதிகாலை எழுந்து பார்த்த சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் வாகனங்கள் மீது படிந்திருந்த உறைபனியை கைகளால் எடுத்து வீசி விளையாடி மகிழ்ந்தனர். மேலும் காலை 9 வரை கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி அதனை சுற்றி நின்று காய்ந்தனர். முதல் நாள் உறை பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் பதிவானது. உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இனி வரும் நாட்களில் -0 டிகிரியை எட்ட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply