பட்டாகத்தி உடன் நான்கு பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம் போலீஸ் வலை வீச்சு

2 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

பல்லடம் அருகே நெடுஞ்சாலையில். போலீசாரின் வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 4 பேர் கைது-மேலும்  4 பேர் தப்பி ஓட்டம் தப்பியோடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து
3 இருசக்கர வாகனங்கள் 1 சொகுசு கார் மற்றும் பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் பல்லடம் போலீசார் இரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் சமூகவிரோதிகளின் நடமாட்டமும் போதைப் பொருள் கடத்துபவர்கள் நடவடிக்கையும் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது சொகுசு ஈகோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் 8 பேர் கொண்ட கும்பல் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வரும் போது சின்னக்கரை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை கண்டு 8 பேர் கொண்ட கும்பல் தப்பித்து ஓட முயற்சி செய்தனர்.

பட்டா கத்திகள்

இதனையடுத்து அவர்களில் 4 பேர் தப்பியோடிய நிலையில் 4 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய பதில் பொருத்தமாக இல்லை எனவே சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் 4 பேரும் கோவையை சேர்ந்த ரோகன், சுரேஷ் சுப்பிரமணி, முத்துகிருஷ்ணன் மற்றும் அண்ணாமலை என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் கொல்லை சம்பவத்தில் ஈடுபட வந்தது தெரியவந்தது.மேலும் சிங்காநல்லூர், பீளமேடு, அன்னூர் போன்ற காவல்நிலையத்தில் திருட்டு, கஞ்சா போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்தி வந்த சொகுசு கார் ஒன்று, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையிலிருந்து 8 பேர் கொண்ட கும்பல் திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தி 4 பேரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply