முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு

2 Min Read
கண்ணன்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

- Advertisement -
Ad imageAd image

மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என சொல்ல அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகினார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

முன்னாள் சபாநாயகர்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மருத்துவரிடம் விசாரித்தார். இந்த சூழலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர் கண்ணன். முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரங்கசாமி

அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன் மகன் விக்னேஷ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1ம் தேதி ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். மேலும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

உயிரிழந்த முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு 74 வயதாகிறது. கண்ணனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என்றும் அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் கண்ணனின் இறுதி சடங்கு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.இறுதிச்சடங்கும் நடைபெற்றது.

 

Share This Article

Leave a Reply