திமுக அதிமுகவில் இணையக்கூடிய சூழல் வரும் , முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.

2 Min Read
  • திமுகவில் ஆட்சியில் கருணாநிதி ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி வருகையால் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் உட்கட்சிப் பூசல் வெடித்து நெருப்பாக எரியும் போது அது சூடு தாங்க முடியாமல் தோழமை கட்சிகள் வெளியேறி அதிமுகவில் இணையக்கூடிய சூழல் வரும் நிலையில் அதிமுக அவைகளை இணைத்து பெரிய கூட்டணி அமைத்து வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களுடன் பேசுகையில் திமுகவில் கருணாநிதி ,ஸ்டாலின், உதயநிதி வருகையால் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் திமுக.

- Advertisement -
Ad imageAd image

அதில் புகைந்து கொண்டு இருந்த தீ நெருப்பாக ஏறிய தொடங்கி பிரகாசமாக உள்ளதால் துரைமுருகன் போன்ற சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டியதால் அதன் உட்கட்சி பூசல் வெடித்து சூடு தாங்க முடியாமல் அதன் தோழமைக் கட்சிகள் வெளியேறக்கூடிய சூழல் உருவாகும் .

அப்போது அவர்கள் அதிமுகவில் வருவார்கள் அவர்களை இணைத்து 2026 இல் மிகப்பெரிய கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என்றும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி செய்யும் திருட்டு ஆட்சியை தாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாமல் அளவுக்கு திருடிக் கொண்டிருப்பதாகவும் ஆகவே மக்கள் தங்கள் இடத்தில் இருப்பதாகவும்.

விரைவில் மெகா கூட்டணி அமைத்து வருகின்ற 2026 இல் எடப்பாடி யார் முதலமைச்சர் ஆவது உறுதியான என பொன்னையன் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பி வி ரமணா அதிமுகவில் 2026 எடப்பாடி யார் முதலமைச்சராக வரவேண்டும் என பல இளைஞர்கள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும்…

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/kummidipoondi-next-elavoor-combined-test/

ஆகவே இளைஞர்கள் அனைவரும் எடப்பாடி பக்கம் இருப்பதாகவும் கடந்த தேர்தல்களில் எவ்வாறு கூட்டணியில் மாறி மாறி இருக்கின்றதோ அதேபோன்று மாறும் சூழல் ஏற்படும் அதேபோல் 2026 இல் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைக்கும் எடப்பாடி யார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவது உறுதியென அவர் தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply