நரேஷ் குப்தா உடல் நலக்குறைவால் காலமானார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது பல்வேறு நடைமுறைகளை சாத்தியப்படுத்தியவர். வாக்காளர்களை ஓட்டுப்போட விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல் நலக்குறைவால் காலமானார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது பல்வேறு நடைமுறைகளை சாத்தியப்படுத்தியவர். வாக்காளர்களை ஓட்டுப்போட விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
அவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐஏஎஸ், காலமானதை அடுத்து தமிழக ஆளுநர் ரவி, அவரின் மறைவுக்கு தனது இரங்கலை ட்வீட் மூலம் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், ’’நரேஷ் குப்தா அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், மக்களால் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’’ என பதிவிட்டுள்ளார். பலரும் நரேஷ் குப்தாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.