இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த கணமே காற்றில் பறக்கவிடப்படுகின்றனர். எனவே சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப்போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியவாறு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் பொது வேட்பாளரொருவரை நிறுத்தி, அவருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம்.” என்றார். அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனது பெயரை முன்மொழிந்தால், அப்போதைய கள நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். “தமிழ்மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இரண்டாம் விருப்பத்தெரிவின்றி, தமிழ் வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் தான் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவதில் பயனிருக்கும்.

ஆனால் சி.வி.விக்கினேஸ்வரனோ அல்லது எம்மைத் தவிர்த்த வேறு எந்தவொரு தரப்பினரோ தமிழ்மக்களை ஏமாற்றி, அவர்களைத் தமக்கு வேண்டிய நபருக்கு வாக்களிக்கச்செய்யும் வகையிலான உத்தியாகவே இதனைப் பயன்படுத்திக்கொள்வர். “தமிழ்த்தேசிய விடுதலையை இலக்காகக்கொண்ட சமஷ்டி முறைமையிலான தீர்வை முன்னிறுத்தக்கூடியவகையில் தமிழ்த்தேசியம் சார்ந்த ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம். தமிழ் வேட்பாளரொருவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு எனினும், இதன்மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கனதியான செய்தியை வெளிப்படுத்தமுடியும். அதேபோன்று விரும்பினால் இரண்டாவது விருப்பு வாக்கை பெரும்பான்மையின வேட்பாளருக்கு வழங்கலாம். தமிழ்மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் களமாக எதிர்வரும் அதிபர் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்பதே எனது அபிப்பிராயம்.” என்றார்.
இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வெடித்த மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக நேர்ந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலையில் அதிபரானார். இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அடுத்தாண்டு செப்டம்பருக்குள் அதிபர் தேர்தலை அறிவித்து, நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்நிலையில், யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், “இலங்கையில் அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த 4 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதால், ரணிலினால் 50% வாக்குகளை பெற முடியாது.

தெற்கில் இருந்தும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகள் எந்த கட்சிக்கும் கிடைக்காது. தமிழ் கட்சிகளும் தங்களது சார்பில் ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியாது. அதே நேரம், தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவது எளிது. அந்த பொதுவேட்பாளருக்கான தகுதிகள் தன்னிடம் இருப்பதால், அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்து கேட்டு கொண்டால் போட்டியிட தயாராக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.