கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜா வை சேர்ந்த அஞ்சலைக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜக வை சேர்ந்த அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஓட்டேரி பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சியின் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் என பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. விசாரணை முடிவில் கொலை செய்யப்பட்டது எதற்காக என தெரியவரும். அது மட்டும் அல்லாமல், அஞ்சலை உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் வங்கி கணக்கில் இருந்து பணம் கை மாறியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை மும்பரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் குற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
Leave a Reply
You must be logged in to post a comment.