அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தேர்தல் வெற்றி செல்லும் – ஐகோர்ட்டு தீர்ப்பு…!

2 Min Read

தமிழக சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியனும் திமுக சார்பில் எஸ்.கே வேதரத்தினமும் போட்டியிட்டனர். இதில் வேதரத்தினத்தை விட 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.எஸ் மணியன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வேதரத்தினம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம். தண்டபாணி விசாரித்தார். அப்போது வேதரத்தினம் தரப்பில் ஓ.எஸ் மணியன் தொகுதி முழுவதும் ரூபாய் 60 கோடி பணம்ப்பட்டுவாடா செய்தார். இரு வேறு சமூகத்தினர் மத்தியில் விரோதத்தை தூண்டி, பரிசு பொருட்களை வழங்க டோக்கன் விநியோகம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்

இதனை தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வசிக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்தார். நகராட்சி ஆணையர் துணை போலிஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் ஏஜென்ட் போல பயன்படுத்தினார் என்று வாதிடப்பட்டது. ஓ.எஸ் மணியன் தரப்பில் தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை. இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களின் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில் ஓ.எஸ் மணியனின் தேர்தல் வெற்றி செல்லும். இது எதிர்த்து திமுக வேட்பாளரான கே.எஸ் வேதரத்தினம் தொடர்ந்து தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்

பின்பு அவர் நிர்பர்களிடம் கூறுகையில்; இந்த வழக்கு தொடர்ந்த நாளே நான் வெற்றி பெறுவேன் என்று எனக்கு தெரியும். எந்த தவறான நடவடிக்கையும் இல்லாத போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. சின்ன பாம்பாக இருந்தாலும் அதை பெரிய கம்பை கொண்டு அடிக்க வேண்டும் என்ற பழமொழிக்கு இணங்க நாங்கள் வழக்கை எதிர் கொண்டோம். தற்போது விசாரணை முடிந்து நீதியும், நியாயமும், உண்மையும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

Share This Article

Leave a Reply