- தமிழ்நாட்டில் 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு எதிர்பார்ப்பு, உணவுத்துறை செயலர் ஜே ராதாகிருஷ்ணன் நம்பிக்கை.
தஞ்சையை அடுத்த மருங்குளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலர்,
ஜே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 83 ஆயிரத்து 152 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட இதே நாளில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகம் என்றும் தஞ்சாவூரில் குடோன்கள் மூலம் 2.7 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு வசதி உள்ளது, கடந்த ஆண்டு 1.69 லட்சம் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 89 ஆயிரத்தி 660 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆகஸ்ட் வரை செய்யப்பட்டுள்ளது, இந்தாண்டு இதுவரை 7 ஆயிரத்து 543 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் தஞ்சையில் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டு கூட்டுறவு கடன் இலக்காக 16 ஆயிரத்தி 500 கோடி இதுவரை 4.91லட்சம் விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 405 கோடி கடன் வழங்கியுள்ள தாகவும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 8 ஆயிரத்தி 74.25 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, இதில் 4 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர், இந்த ஆண்டு இலக்காக 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார், இந்த ஆய்வின்போது நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
பேட்டி:
ஜே.ராதாகிருஷ்ணன் உணவுத்துறை செயலர்
Leave a Reply
You must be logged in to post a comment.