உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பட்டை ஏற்றுக்கொண்டு நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம்

1 Min Read
விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இரும்பு பட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி 40 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் முகப்பு பகுதி நொறுங்கியது அதில் சிக்கி கொண்ட சிறுவனை மீட்க பயணிகள் பேருந்தின் தகரத்தை உடைத்து சிறுவனை மீட்டனர்.

மேலும் அதில்  பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் ஏற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்பு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

Share This Article

Leave a Reply