கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து 2 வருடங்கல் ஆன நிலையில், சில வரலாற்றுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனைத் திட்டம்தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

அதில், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து அவர் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
அந்த 58 பேரில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், எம்பிசியில் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 12 பேர் மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் பெண் ஓதுவார் ஒருவரும் அடங்குவர்.
இதன் மூலம் கோயிலில் குறிப்பிட்ட சாதியியைச் சார்ந்தவர் மட்டுமே அர்ச்சகராக இருந்து வந்த நடைமுறை மாற்றம் கண்டுள்ளது.
அதோடு, கருவறைக்குள் பெண் செல்லக் கூடாது என்ற தடையும் தகர்த்தெறியப்பட்டுவிட்டது.
இன்னிலையில் நாகர்கோவில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள,
பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

தினமும் 4 நேரங்களில் அலங்கார தீபாராதனை நடைபெறும்.
தீபாராதனையின் போதும், புரட்டாசி நவராத்திரி கொலுவின்போதும், திருவிழாக்காலங்களில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளும்போதும் அபிராமி அந்தாதி, தேவாரம் பாடல்களை ஓதுவார்கள் பாடுவது இத்தலத்தில் பிரசித்திபெற்றது.
இக்கோவிலில் பல நாள் ஓதுவாராக இருந்து பணியாற்றிய பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன்பிறகு புதிதாக ஓதுவார் நியமிக்கப்படவில்லை.
இதனால், பாடல் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், திருச்சி திருவானைக்கோவில் அருகே திருமலை சிவா உய்யகொண்டான் கோயிலில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி, தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஆண்களே பணியாற்றி வந்த இக்கோவிலுக்கு முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண் பெண் அனைவரும் சமம் என்ற வாக்கியம் இதன் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த சிறப்பான திட்டத்தை பாராட்டி பல தரப்பட்ட மக்கள் தமிழக முதல்வரை பாராட்டி வருகிறார்கள்.



Leave a Reply
You must be logged in to post a comment.