- சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை ஒட்டி தஞ்சையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தப்பித்து வருவது குறித்தும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கி இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்தும்ர் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தன.
சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தஞ்சை பனகல் கட்டடத்தில் இருந்து துவங்கிய பேரணி அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில் தேசிய சாரணர் படை, நேரு யுவகேந்திரா, செஞ்சிலுவை சங்கத்தினர். முன்னாள் ராணுவத்தினர், சோழ தேசத்து பட்டாளம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் வீட்டில் பயன்படுத்தபடும் தேங்காய். தண்ணீர் பாட்டில், தெர்மாகோல், குடம், காலி சிலிண்டர் இவற்றை பயன்படுத்தி எப்படி பாதுகாப்பாக தப்பித்து வருவது குறித்தும்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/jayalalithaa-provided-various-welfare-schemes-for-the-advancement-of-women-former-admk-minister-varamathi/
ஆபத்தான இடங்களில் சிக்கி இருப்பவர்களை இரண்டு பேர் இரண்டு கைகளை கோர்த்தபடி, நான்கு கைகளை கோர்த்தபடி, சுயநினைவு இழந்தவர்களை டோலி முறையில் தூக்கி வருவது, காயம் அடைந்து இருப்பவரை தோளில் சுமந்து பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறையில் விளக்கம் அளித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.