- நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் தேவநாதன் உட்பட மூன்று பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மூன்று பேரும் நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேரில் ஆஜர்படுத்தபட்டனர்.

இதனையடுத்து, தேவநாதன் யாதவ் உட்பட மூன்று பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூவரும் புழல் சிறைக்கு அழைத்து
செல்லப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.