பெண் எஸ்.பி பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் 18-ம் தேதி ஆஜராக உத்தரவு..!

2 Min Read

பெண் எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கில் உயர்நீதிமன்றம் மனுவை ஏற்காத நிலையில் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் வருகின்ற 18 ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

- Advertisement -
Ad imageAd image

பெண் எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் ஜன.6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜேஷ் தாசுக்கு உத்தரவிட்டது.

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் 18-ம் தேதி ஆஜராக உத்தரவு

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்.பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். பாலியல் தொல்லை வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இன்று வாதாடுவதற்கு இறுதி கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

விழுப்புரம் நீதிமன்றம்

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேல்முறையிட்டு வழக்கில் வரும் ஜன.6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார். அதன் பின்னர் உயர்நீதிமன்றம் மேல் முறையீடு இருப்பதன் காரணமாக வழக்கை 12 ஆம் தேதி இன்று ஒத்தி வைத்தார்.

பின்னர் உயர்நீதிமன்றம் மனுவை ஏற்காத நிலையில் இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸின் விளக்கங்களை கேட்க வருகின்ற 18 ஆம் ததி விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Article

Leave a Reply