மாமன்னன் ராஜசோழனின் சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

1 Min Read
  • தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும் இந்தக் கோவிலைப் பற்றி உலா வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் மிகப் பெரிய இந்துக் கோவில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பிரபல இந்து கோவில்களைப் பட்டியலிட்டால், தமிழகத்திலிருந்து திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவில் ஆகிய கோவில்கள் நிச்சயம் இடம்பெறும்.

இந்த கோவில்களில் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது.

கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் முத்தரைய மன்னன் ஒருவரைத் தோற்கடித்து பிற்கால சோழ பேரரசை நிறுவியபோது, தஞ்சையை சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். இதற்குப் பிறகு சுமார் 176 ஆண்டுகள், அதாவது ராஜேந்திரச் சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை தஞ்சையே சோழர்களின் தலைநகராக இருந்தது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,039 சதய விழா வருகிற 9 மற்றும் 10ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-shooting-of-purana-hundred-will-begin-in-december-sivakarthikeyan-to-act-in-two-films-at-the-same-time/

இந்த விழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தல் கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவினை சதயகுழு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Share This Article

Leave a Reply