அனுமதியின்றி வாய்க்கால் மூலம் தண்ணிர் பயன்படுத்தும் விவசாயிகள்..!

3 Min Read
விவசாயி சந்திரநதி வாய்க்கால் பாசனம்

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் ஒரு சில விவசாயிகள் அனுமதியின்றி சந்திரநதி வாய்க்காலை 200 மீட்டர் தூரம் 3 அடி ஆளப்படுத்தி டீசல் இன்ஜின் மூலம் தேங்கிய தண்ணீரை இறைத்து விவசாயம் செய்வதால் மேல் பகுதிக்கு தண்ணீர் பாயாமல் 700 ஏக்கர் விவசாயம் பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார்.

- Advertisement -
Ad imageAd image

சந்திரநதி வாய்க்கால், ஆளப்படுத்திய பகுதி மற்றும் வாய்க்கால், விவசாயிகள், விவசாயப் பணிகள்,இளையராஜா, சுப்பிரமணியன்,, விவசாயிகள் பேட்டி. நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் திருப்பூண்டி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்பபிடாகை சிந்தாமணி திருப்பூண்டி பிஆர்பபுரம் காமேஸ்வரம் காரைநகர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றன.

சந்திரநதி வாய்க்கால்

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு கவலைய அடைந்துள்ளனர் விவசாயிகள்.

நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.

சந்திரநதி வாய்க்கால் பாசனம்

திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்பபிடாகை, சிந்தாமணி,திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு 3 அடி ஆழப்படுத்தி அதில் தேங்கும் நீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்தனர்.

சந்திரநதி வாய்க்கால் பாசனம்

ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருவதால் சந்திரநதி வாய்க்கால் மேல் மற்றும் கீழ் பகுதி பாசனத்தை பயன்பெறும் 700 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் இன்றி தற்போது வரை பாதித்துள்ளதாகவும் மேலும் தண்ணீர் வரக்கூடிய காலம் மட்டுமல்லாமல் மழை தண்ணீரும் தங்களுக்கு வந்து சேராது என கவலைக்கு ஆளாகியுள்ள விவசாயிகள் வாய்க்காலை ஆழப்படுத்தியதற்கு யார் அனுமதி தந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள் உடனடியாக தங்கள் பகுதி வரை தண்ணீர் பாய சந்திர நதி வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் அனுமதியின்றி தங்களது சுய லாபத்திற்காக இயந்திரம் மூலம் ஆழப்படுத்திய விவசாயிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்கவில்லை இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸிடம் கேட்டபோது பொதுப்பணித்துறை மூலம் அங்கு ஆய்வு செய்து உண்மை தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply