விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் குறிப்பிட தகுந்த ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடமாகும். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மற்ற விற்பனை கூடங்களை விட அதிக அளவில் விலை போகும் சிறப்பு கொண்டது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை கூட நெல் கொண்டு வருவதுண்டு.
தொடர்ந்து இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் வரத்து அதிகமாக இருப்பதால் இங்கு போதுமான இடவசதி இல்லை என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக விவசாயிகளால் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற தேர்தல் அறிக்கையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் விரிவுபடுத்தப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படும் என்கிற உறுதிமொழி இடம் பெறுவது உண்டு. ஆனால் எந்த கட்சியும் இதற்கு முன் வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் வியாபாரிகள் ஆக்கிரமித்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான கிடங்கு அதிகாரிகளின் அலட்சியத்தாலும் வியாபாரிகளின் அச்சுறுத்தலாலும் இங்கு விவசாயிகள் நெல் முட்டைகளை அடுக்கி வைக்க முடியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் புதிதாக வரும் நெல் மூட்டைகளை உள்ளே இறக்கி வைக்க முடியாத சூழ்நிலையில் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நீடித்தது. பின்னர் போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர் ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்வு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த முறையாவது இதற்கு தீர்வு கிடைக்குமா?என்று ஏங்கி இருக்கிறார்கள் விவசாயிகள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.
Leave a Reply
You must be logged in to post a comment.