- காப்பிட்டு தொகைக்கு உரிய வட்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது .
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் – குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சரி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். காலதாமதமாக வழங்கப்படும் காப்பீடு தொகைக்கு உரிய வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும், பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம் ஆண்டுக்கு ரூபாய் 6000 என்பதை, ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க :http://thenewscollect.com/ready-ah-nanba-ott-release-date-announcement-goat-ott-release-date/
ஆர்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் தலைவர் பழனியப்பன் , தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பிட்டு நிறுவாகம் காப்பிட்டு தொகையினை தராமல் ஏமாற்றி வருகிறது .இதனை மத்திய அரசு கண்டும் காணாமல் அலட்சிய போக்கில் செயல் பட்டுவருகிறது .
கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் , பயிர் காப்பீடு வழங்குவதில் குளறுபடிகள் நிலவி வருகிறது , இதனை ஆராய்ந்து குளறுபடிகளை நீக்கி , விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .
Leave a Reply
You must be logged in to post a comment.