- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக் கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடிகள் முற்றிலும் மழை நீரில் சேதமடைந்து விளைநிலத்தில் சாய்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை நீர் வடியாமல் உள்ளதால், மழைநீரில் பயிர்கள் மிதந்து தற்போது அழுகி முளைக்க தொடங்கி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அழுகி – முளைத்த பயிருடன் விவசாயிகள் விளைநிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/madras-high-court-has-given-permission-to-set-up-firecracker-shops-on-the-island/
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டிய விவசாயிகள், அதிகாரி போல் பேசாமல், மனசாட்சியுடன் பேசுங்கள் என விவசாயிகள்அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.