இடி தாக்கி விவசாயி பரிதாப பலி..!

2 Min Read

காஞ்சிபுரத்தை அடுத்த கரூர் பகுதியில் விவசாய நிலத்தில் ஆடு கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த விவசாயி முனுசாமி என்பவர் பார்த்து கொண்டிருந்த போது திடிரென்று இடி தாக்கி பரிதாப பலி. போலிசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. இடி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடேயை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -
Ad imageAd image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடிரென்று இடியுடன் கூடிய கன மழையானது பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளான வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் அகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதியடைந்தனர்.

காஞ்சி தாலுக்கா காவல் நிலையம்

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த கரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயினான முனுசாமி என்பவர், அப்பகுதியில் விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்து கொண்டிருந்த பொழுது, இடியுடன் கூடிய பெய்த கனமழையின் போது, திடிரென்று எதிர்பாராத விதமாக அந்த நபர் மீது திடிரென்று இடி தாக்கியதில் விவசாயி முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து பலியானார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுக்கா போலீசார், கனமழையில் இடி தாக்கியதில் பலியான விவசாயி முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மக்களிடேயை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 5.7 செண்டி மீட்டரும், குறைந்தப்பட்சமாக வாலாஜாபாத்தில் 5 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 3.2 செண்டி மீட்டரும், குன்றத்தூரில் 3.1 செண்டி மீட்டரும் மழையானது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply