
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அழகிய அன்ன பறவை வாகனத்தில் அதிகாலை வேளையில் விதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடிகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஓன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அறியப்படுவதுமான கோவில் மாநகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி 2-வது நாள் உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

இந்த வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 2-வது நாள் உற்சவத்தில் இன்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருவாபுரணங்கள், மல்லிகைப்பூ, செண்பகப்பூ, மலர் மாலைகள் அணிவித்து, வெள்ளியால் ஆன அழகிய அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். பக்தர்களுக்கு காட்சியளித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அதன்பின்னர் அழகிய அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேளதாள பேண்டு வாத்தியங்கள் முழங்க இன்று அதிகாலை வேளையில் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அழகிய அன்னப் பறவை வாகனத்தில் அதிகாலை நேரத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடிகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.