மதுரையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதிகாரிகள், 05.04.2024 அன்று தேனியில் உள்ள ஒரு நகைக்கடையில் நடத்திய சோதனையில் 3.88 கிலோ கிராம் போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
எம்எச் ஜூவல்லர்ஸ், 106, பகவதி அம்மன் கோயில் தெரு, தேனி, என்ற முகவரியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்தியத் தரநிர்ணய அமைவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

இந்திய தர நிர்ணய சட்டம், 2016ன் படி, அந்த நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், இரண்டாவது மற்றும் அதைத் தொடர்ந்து மீறினால் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குறையாமலும், தண்டனை வழங்க இந்த சட்டம் வழி வகுக்கிறது. மேலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரை அபராதமும் விதிக்கப்படும்.
உற்பத்தியாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் போலிப்பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கவும், தவறான வழியில் பொதுமக்களை வழிநடத்துவதை தவிர்க்கவும், இந்திய தரநிலைகள் அமைவனம் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.